33 சதவீத இடஒதுக்கீடு: மகளிர் காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மகளிர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மகளிர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மே 23-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிலையில், மகளிர் காங்கிரஸார் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்திபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட 2 லட்சம் கையெழுத்துப் படிவங்களை ஜான்சிராணியிடம் மகளிர் காங்கிரஸார் ஒப்படைத்தனர்.
சந்திப்பு: இந்தப் படிவங்கள் அனைத்தையும் தில்லிக்கு கொண்டுச் சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை ஆகஸ்ட் 19 -ஆம் தேதி நேரில் சந்தித்து வழங்கி, மகளிருக்கான இடஒதுக்கீட்டை அளிக்குமாறு வலியுறுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com