செப்.5 -இல் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5 -ஆம் தேதி நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்.5 -இல் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5 -ஆம் தேதி நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையேயான பிரச்னைகளுக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை.
அதிமுகவின் பிளவுக்கு பாஜக காரணமா, இல்லையா என்பது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நீட் தேர்வு சிக்கல், ஹிந்தி திணிப்பு போன்றவற்றில் அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜகதான் காரணம்.
தமிழகத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மீது தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறினேன். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஏற்கெனவே கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம்' என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் அரசு மீது நாங்கள் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரவில்லை. பேரவைத் தலைவர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் நடைபெற்றது. திமுக சார்பில் கொண்டு வரப்படவில்லை. எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று வரும்போது, அந்த நேரத்தில் இருக்கக்கூடிய சூழலைப் பொருத்து, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள ஏரியை திமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு நாள் பார்வையிடுவேன். தமிழகத்தில் திமுகவினர் தூர்வாரியுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் நிச்சயமாக நேரடியாகச் சென்றுப் பார்வையிடுவேன்.
முரசொலி விழா: மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா பொதுக் கூட்டம், செப்டம்பர் 5 -ஆம் தேதி கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com