டிடிவி தினகரனால் குண்டூசியை கூட அசைக்க முடியாது: மதுசூதனன்

அதிமுகவில் ஒரு குண்டூசியை கூட டிடிவி தினகரனால் அசைக்க முடியாது என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி அவைத் தலைவர்
டிடிவி தினகரனால் குண்டூசியை கூட அசைக்க முடியாது: மதுசூதனன்

சென்னை: அதிமுகவில் ஒரு குண்டூசியை கூட டிடிவி தினகரனால் அசைக்க முடியாது என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை ஏ.ஜி.கோவில் தெருவில் 13 இடங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நற்பணி மன்றங்களை அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் திறந்து வைத்தார்.

பின்னர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவின் 2 அணிகள் இணைய ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மற்றும் கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என்ற 2 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். 3-வது கோரிக்கையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குடும்ப அரசியலை ஒழிக்கவே எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. ஆனால், தற்போது சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை கைப்பற்ற துடிக்கிறார்கள். சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

மக்கள் விரும்பினால் டிடிவி தினகரன் புது கட்சி தொடங்கலாம். அதிமுகவில் இருந்து ஒரு குண்டூசியை கூட அவரால் அசைக்க முடியாது. சசிகலா குடும்பத்தாருக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் சசிகலா குடும்பம் அதிமுகவுக்கு வந்தது.

சசிகலாவை எதிர்க்க எனக்கு இதுவரை எந்த பின்பலம் கிடையாது. தற்போது எனக்கு ஓபிஎஸ் பின்பலமாக இருக்கிறார். அதிமுகவின் சட்ட விதிகளுக்குட்பட்டு பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சசிகலா சிறையில் இருந்து தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறுவது நம்பும் படியாக இல்லை. சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்.

கட்டப்பஞ்சாயத்துக்காரர் வெற்றி வேலுக்கு அதிமுகவின் வரலாறு தெரியாது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com