ராணுவ வீரர் இளையராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

சோஃபியன் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிப்பாய் இளையராஜா உடலுக்கு திங்கட்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராணுவ வீரர் இளையராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபஃபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 12-ந் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேப்டன் உட்பட மூவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் இளையராஜா (19 வயது) மகாரெஜிமெண்ட் படைப்பிரிவு, வீரமரணம் அடைந்தார். 

இந்நிலையில், இளையராஜா உடல் திங்கட்கிழமை மதியம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு ராணுவ மரியாதையுடன், மதுவரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் அந்த ஊர் மக்கள் அனைவரும் இளையராஜா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

வீரமரணம் அடைந்த இளையராஜா குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com