ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் சாவு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இறந்த வைஷ்ணவியின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாத நிலையில், அவரது சடலத்தை உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் ஆம்பூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ரால்ல கொத்தூர் கிராமத்துக்கு எடுத்
இறந்த வைஷ்ணவியின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாத நிலையில், அவரது சடலத்தை உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் ஆம்பூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ரால்ல கொத்தூர் கிராமத்துக்கு எடுத்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜ்குமார் (65) . இவரது நண்பர் சென்னை தி.நகரைச் சேர்ந்த சந்தானம் (73) . இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டிச் சென்றார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் அருகே பகல் 12.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியுள்ளது. எதிர்பாராதவிதமாக அதன் மீது, ராஜ்குமாரின் கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பகல் 1 மணிக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மருத்துவர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், ராஜ்குமார் தனது செல்லிடப்பேசியில் குடும்பத்தினருக்கு தான் விபத்தில் சிக்கிய விவரத்தை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஆம்பூர் கிராமிய போலீஸார் அரசு மருத்துவமனைக்குச் சென்று ராஜ்குமாரிடம் விவரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், சந்தானத்துக்கு தெரிந்த சிலரும் அங்கு வந்தனர். மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற தகவல் அறிந்த உடன், அங்கு பணியில் இருந்தவர்களிடம் இதுகுறித்து கேட்டனர். இந்நிலையில் ராஜ்குமார் இறந்தார். இதைக் கண்ட அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த சில ஊழியர்கள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த சந்தானம் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இறந்தவருக்கு இசிஜி கருவி பொருத்தி நாடகம்

ராஜ்குமார் இறந்த தகவல் அறிந்த நிலையிலும் அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவமனை பணியாளர்கள் இசிஜி கருவியைப் பொருத்தி அவர் உயிரோடு இருப்பது போலவும், அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்றும், இறந்தவரின் திறந்த கண்களை மூடி அவர் மயக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

சிகிச்சைக்கு வந்த சிறுமியும் சாவு

ஆம்பூரை அருகே ரால்லகொத்தூரைச் சேர்ந்த ராஜேஷின் மகள் வைஷ்ணவியை (13) மூச்சுத் திணறல் காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவர்கள் இல்லாததால் வைஷ்ணவிக்கும் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. உடன் வந்த உறவினர்கள் சிறுமியை காப்பாற்றும்படி கதறி அழுதுள்ளனர். பிறகு 3.30 மணிக்கு மருத்துவர் ஒருவர் வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்தரர். சுமார் 2 மணி நேரமாக உயிருக்குப் போராடிய அந்த சிறுமி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்தார்.

நோயாளிகளை திருப்பி அனுப்பிய ஊழியர்கள்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை பணியில் இருந்த பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்களுக்கு விடுமுறை. அதனால் நாளை வரும்படி கூறி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்ப்பிணிக்கு கருக்கலைந்து சிகிச்சைக்காக வந்தார். மருத்துவர்கள் இல்லாததால் அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் இல்லாததால் அவர் ஆட்டோ மூலம் குடியாத்தம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவர் இறந்த தகவல் தெரிந்த பிறகும் மருத்துவ அலுவலர் ஷர்மிளா மருத்துவமனைக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்து மக்கள் கட்சி போராட்டம்

மருத்துவர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் கோபிநாதன், குமரன் உள்ளிட்டோர் திரண்டு ஆம்பூர் அரசு அரசு மருத்துவமனையின் கதவை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி விசாரணை நடத்த ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்த ஜீப்பை இந்து மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மருத்துவ அலுவலர் மாற்றம்?

பிரச்னை குறித்து நேரில் பார்வையிட வந்த இணை இயக்குநரிடம் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி மருத்துவ அலுவலர் உடனடியாக மாற்றம் செய்யப்படுவார். மேலும் போதிய மருத்துவர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் இருவர் இறந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குநர் சாந்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com