"உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சுதேசி இலச்சினை, வரி விலக்கு தேவை': த. வெள்ளையன்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கென சிறப்பு சுதேசி இலச்சினையை அரசு தயார் செய்வதுடன், வரி விலக்கும் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தினார்.
"உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சுதேசி இலச்சினை, வரி விலக்கு தேவை': த. வெள்ளையன்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கென சிறப்பு சுதேசி இலச்சினையை அரசு தயார் செய்வதுடன், வரி விலக்கும் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சில்லறை வணிகத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் 1991இல் உலக வர்த்தக ஒப்பந்தமானது இந்தியா மீது திணிக்கப்பட்டது. பின்னர், வாட் வரி விதிப்பு, தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள், ஆன்-லைன் வர்த்தகம் என தொடர்ச்சியாக முயன்றும் சில்லறை வணிகத்தை கைப்பற்ற முடியவில்லை.

எனவே, ஜிஎஸ்டி என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி சில்லறை வணிகத்தை முற்றிலும் முடக்க முயற்சி எடுத்து வருகிறது மத்திய அரசு. வெளியிலிருந்து இத்தகைய தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, இந்து சமய அறநிலையத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை என பல்வேறு துறைகளும் உள்நாட்டில் இருந்து கொண்டே சில்லறை வணிகர்கள் மீது பல்வேறு வழிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழலில் இந்திய மக்கள் அனைவருக்கும் சுதேசி உணர்வு அதிகரிக்க வேண்டும். அந்நியப் பொருள்களை வாங்கமாட்டோம், விற்பனை செய்யமாட்டோம்  என உறுதியேற்க வேண்டும். சுதேசி விழிப்புணர்வுக்காக மாநிலம் முழுவதும் பிரசார இயக்கங்கள் நடத்தப்படும்.

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சுதேசி இலச்சினையை அரசு வெளியிட வேண்டும். இதுமட்டுமல்லாது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வரி விலக்கும் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதிகரித்து வரும் சங்கிலி பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் கடைகள் திறந்திருந்தால் இத்தகைய சம்பவங்கள் குறையும். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக அந்தந்தப் பகுதி வியாபாரிகளுடன் காவல் துறை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரங்களில் இரவு 11 மணி வரை கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com