தமிழக மக்களின் நலனுக்காக ஆளும் கட்சியினரிடையே சுமுக நல்லுறவு அவசியம்

தமிழக மக்களின் நலன் கருதி, ஆளும் கட்சியினர் தங்களுக்கு இடையே நிகழும் கருத்து மோதல்களை தவிர்த்து, சுமுக நல்லுறவை பேண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்
தமிழக மக்களின் நலனுக்காக ஆளும் கட்சியினரிடையே சுமுக நல்லுறவு அவசியம்

தமிழக மக்களின் நலன் கருதி, ஆளும் கட்சியினர் தங்களுக்கு இடையே நிகழும் கருத்து மோதல்களை தவிர்த்து, சுமுக நல்லுறவை பேண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
வேளாங்கண்ணியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஆக.16 }இல் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் , விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், வறட்சி நிவாரணம் போதிய அளவு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
செப். 21 }இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது.
நீட் தேர்வு குறித்து மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வுக்கு முழுமையான விலக்கு ஒன்றுதான் தீர்வு. மாநில அரசு திரும்ப, திரும்ப வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசுக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்வை மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது.
தமிழகமெங்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆணவக் கொலைகள், குடியிருப்புக்குள் புகுந்து தாக்குவது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் 60 }க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களையும், அவர்களின் படகு உள்ளிட்ட உடைமைகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளும் கட்சியினர் தங்களுக்கிடையே கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இது அதிமுகவை பலவீனப்படுத்துவதோடு, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழக மக்களின் நலன்களையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஆளும் கட்சியினர் சுமுக நல்லுறவை பேணி பாதுகாக்க வேண்டும்.
நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் போராட்டங்களில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோலியம் கெமிக்கல் முதலீட்டு அமைக்க உள்ள இடங்களில் மக்களை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் இங்கே பெட்ரோலியம் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை அமைப்பதை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளர். எனவே அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார் திருமாவளவன்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் முகமது யூசுப், மாவட்டச் செயலர் பரிமளச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் பேரறிவாளன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேதாரண்யத்தில்...: வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தொல்.திருமாவளவன் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, உடைமைகளைப் பறித்துக்கொள்வது போன்ற பாதிப்புகளுக்குள்ளாவது தொடர்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண மத்திய அரசு அரசியல் ரீதியிலான கொள்கை முடிவை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com