தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா?

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் இன்றைய நாள் மிகச் சிறப்பானதொரு நாளாக அமையவிருக்கிறது.
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா?


சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயம், ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் இன்றைய நாள் மிகச் சிறப்பானதொரு நாளாக அமையவிருக்கிறது.

தமிழகத்தில் இன்று பெய்யும் மழை, மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பெய்யவில்லை. காற்றில் நிலவும் ஈரப்பதம் மற்றும் வெயில் காரணமாகவே வெப்பச்சலனம் ஏற்படுகிறது.

இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு உள்ளது. அதோடு கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.

இந்த பட்டியலில் கன்னியாகுமரி இடம்பெறத் தவறிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை கூட ஆச்சரியமூட்டும் வகையில் மழை பெய்துள்ளது. அங்கு எப்போதாவதுதான் மழை மேகங்களின் தரிசனம் கிட்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக் வாசகர்கள் கேட்டதற்கும் இந்த பதிவிலேயே பதில் கூறியுள்ளார். அதாவது, பொள்ளாச்சி, உடுமலைப்பேட், சிவகிரி (ஈரோடு) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு அருமையாக உள்ளது.மேட்டுப்பாளையத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பதிவானது. இன்றும் அப்பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நன்றாகவே உள்ளது.

கடைசியாக சென்னை... 
வட கடற்கரை மாவட்டங்களாக திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளுக்கும் இன்று மழை வாய்ப்பு நன்றாகவே உள்ளது. சென்னையில் பரவலாக கருமேகங்கள் ஆங்காங்கே தென்படுவதைப் பார்க்கலாம். இவற்றால் திடீர் மழைகளுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்று சென்னையின் தெற்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com