இந்தியாவோடு புதுச்சேரி இணைந்த சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா

புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் இன்று நடைபெற்றது
இந்தியாவோடு புதுச்சேரி இணைந்த சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா

புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு தியாகிகளை கவுரவித்தனர்.

கீழூர் வாக்கெடுப்பு
பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் 1962-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது.

சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா
இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடந்த கீழூரில் 1974-ம் ஆண்டு புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக,
தியாகிகள் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவு கூரும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, டிஜிபி சுனில்குமார் கௌதம், சீனியர் எஸ்.பி. ராஜிவ் ரஞ்சன், தில்லி பிரதிநிதி ஜான்குமார், மற்றும் அரசு அதிகாரிகள் பலர்
கலந்துகொண்டனர். விழாவில் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com