இளைஞர்கள் ஜாதி, மத பேதம் பார்க்காமல் இருந்தால்தான் இந்தியா வலிமை பெறும்: ஆர்.நல்லகண்ணு பேச்சு

இளைஞர்கள் ஜாதி, மத வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என சுதந்திர போராட்டத் தியாகியும் இந்திய கம்யூ. மூத்த தலைவருமான
இளைஞர்கள் ஜாதி, மத பேதம் பார்க்காமல் இருந்தால்தான் இந்தியா வலிமை பெறும்: ஆர்.நல்லகண்ணு பேச்சு

இளைஞர்கள் ஜாதி, மத வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையுடன் இருந்தால்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என சுதந்திர போராட்டத் தியாகியும் இந்திய கம்யூ. மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.
மதுரை பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேசியகொடியேற்றி அவர் பேசியது:
ஜாதி, மத வேற்றுமை பார்க்காதீர்கள். மதம் இருந்தால் நாடு துண்டாகும். காந்தியடிகள் ஆடை துறந்தது மதுரையில்தான். அது வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா விடுதலை பெற்றபோது உலகமே உறங்கிக்கொண்டிருக்கின்றது. நாம் விழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விழிப்பு தொடரவேண்டும் என நேரு கூறினார்.
அந்த சமயம் அரசியல் சட்டத்தை உருவாக்க யாரைத் தலைவராக நியமிக்கலாம் என ஆலோசனை நடந்தது. அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைப் புரிந்தவரை நியமிக்கலாம் என ஒருமித்தமாக முடிவெடுத்து அம்பேத்கரை அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக்கினர். அம்பேத்கர் 2 ஆயிரம் திருத்தங்களை மேற்கொண்டு தலைசிறந்த சட்டங்களை உருவாக்கி கொடுத்தார் . அதன்பிறகு அவர், இந்தியா ஒரு பெரிய நாடு. இங்கு பல சமயங்கள், பல மொழிகள் இருக்கின்றன. மதம், மொழிகளுக்கு இடையே நல்லிணக்கம் இருந்தால்தான் நாடு நிலைக்கும் என்றார். இந்தியாவில் 40 வயதுக்கு கீழ் 60 சதவீத இளைஞர்கள் இருக்கின்றனர். அந்த இளைஞர்களின் வலிமையை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இளைஞர்கள் ஜாதி, மத, வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வலிமையான இந்தியா உருவாகும் என்றார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நேரு தலைமை வகித்தார். செயலர் எம்.விஜயராகவன், பொருளாளர் எ.கோவிந்தராஜன், உதவி செயலர் ராஜேந்திரபாபு, இயக்குநர் ராஜா கோவிந்தசாமி, பேராசிரியர் நம்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com