உயர் மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம்

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மூலம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இயக்ககம் கலந்தாய்வை நடத்த உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 192 இடங்கள் என நாடு முழுவதும் சுமார் 1,200 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வு நடைமுறைகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கின. வியாழக்கிழமை (ஆக.17) இடங்கள் ஒதுக்கீடு நடைபெறும். முதல்கட்டக் கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியிடப்படும்.
கலந்தாய்வில் இடங்களைப் பெறுபவர்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சென்று சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான நடைமுறைகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com