சென்னை - மதுரை இருவழிப் பாதை பணிகள் இந்தாண்டு நிறைவு பெறும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி

சென்னை - மதுரை இடையே 497 கி.மீ. தூரத்துக்கான இருவழிப்பாதை மற்றும் மின்மயமாக்கும் பணிகள் இந்தாண்டு நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி.

சென்னை - மதுரை இடையே 497 கி.மீ. தூரத்துக்கான இருவழிப்பாதை மற்றும் மின்மயமாக்கும் பணிகள் இந்தாண்டு நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 71-ஆவது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது:
பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.74 கோடியில் இதுவரை ரூ.34.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம், மின் தூக்கிகள், காத்திருக்கும் குளிர்சாதன அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 40 சதவீத ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அனைத்து ரயில்களிலும் இது நடைமுறைக்கு வந்துவிடும்.
பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் , 25 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆளில்லா ரயில்வே கேட் உள்ள இடங்களில் 7 ரயில்வே மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் கட்டப்பட்டுள்ளன.
பெண்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு நடப்பாண்டில் மட்டும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 127 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், மகளிர் பெட்டிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com