சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு: ஆகஸ்ட் 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு: ஆகஸ்ட் 29 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ. டி.வி.க்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நிய செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா, அவரது சகோதரி வனிதாமணியின் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை கடந்த 1996 ஆம் ஆண்டு 3 வழக்குகளைப் பதிவு செய்தது. மேலும் சசிகலா, பாஸ்கரன் மீது தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த வழக்குகளின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கு விசாரணைக்கு சாட்சிகள் ஆஜராகாததால், வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக இவ்வழக்கு கடந்த முறையும் இதே காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com