சந்தியா எழுதிய உயிலின் படி வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம்: முதல்வருக்கு தீபக் கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், முதல்வர்
சந்தியா எழுதிய உயிலின் படி வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம்: முதல்வருக்கு தீபக் கடிதம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என நேற்று மாலை அறிவித்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான தீபா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட இல்லம் எங்களது பூர்வீக சொத்து. அதனை யாரும் வாங்கவோ விற்கவோ, வேறு யாருக்காவது மாற்றித் தரவோ முடியாது.

முதல்வர் பழனிசாமி போயஸ் தோட்ட வீடு நினைவில்லமாகிறது என அறிவித்திருப்பது ஆச்சர்யமாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

இதனை எதிர்த்து நான் வழக்கு தொடர்வேன். இதனை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அந்த இடத்திற்கு உரியவர்கள் நாங்கள். அந்த இடத்தைப் பராமரிக்கவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் அவரது பாரம்பரியத்தை பாதுகாப்பது எனது கடமை.

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக முதல்வர் அறிவிப்பதற்கு முன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே, போயஸ் தோட்ட இல்லம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று தீபா கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான தீபக்,  போயஸ் தோட்ட இல்லம் தங்களுக்கு தான் சொந்தம் எனவும், அதை நினைவிடமாக மாற்றக் கூடாது என முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் எனக்கும், எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது. எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம்.

போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும். போயஸ் தோட்டம் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com