போயஸ் தோட்டத்தில் போலீஸ் குவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக, வியாழக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நினைவில்லமாக மாற்றறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் முன் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
நினைவில்லமாக மாற்றறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் முன் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக, வியாழக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
முக்கியமாக, அந்தப் பகுதிக்குள் அமைந்துள்ள ஐந்து சாலைகளின் சந்திப்புகளிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதேபோல், கூடுதலாக சுமார் 150 ஆயுதப்படை போலீஸார், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லம் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் அழகு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா இருந்த வரை, போயஸ் தோட்டப் பகுதியில் சுமார் 250 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சுமார் 150 போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்தனர். இக்காலக்கட்டத்தில், போயஸ் தோட்டத்தில் போலீஸார் தேவையில்லாமல் குவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததால், போலீஸார் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இரு மாதங்களுக்கு முன்பு திடீரென ஜெயலலிதா வீட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் தினமும் சுமார் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம், நினைவில்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியான பின்னர், தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார், ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என சுமார் 200 போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா வீட்டின் பாதுகாப்பு கருதியும், முக்கியத்துவம் கருதியும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com