மருத்துவ பாடப்பிரிவுக்கான நிர்வாக ஒதுக்கீடு சென்டாக் கலந்தாய்வு

புதுச்சேரியில் மருத்துவ பாடப்பிரிவுக்கான சென்டாக் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு காலாப்பட்டு புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் மருத்துவ பாடப்பிரிவுக்கான சென்டாக் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு காலாப்பட்டு புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 220 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப்படிப்பிற்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு கோரி புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுருத்தி வரும் நிலையில் காலதாமதம் ஏற்பட்டதால் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான ஒதுக்கீட்டீற்கு கடந்த மாதம் 22 மற்றும் 23ந்தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தியது.

இதனைத்தொடர்ந்து அகில இந்திய அளவில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 24ந்தேதி நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்றது. இதனைத்தொடர்ந்து அன்று நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பிறகு நீட்தேர்வு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு சென்ற போது உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக மருத்துவப் பாடப்பிரிவு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடைபெறும் என சென்டாக்
அறிவித்துள்ளது.

அதன்படி காலை 9 மணிக்கு, 10 மணிக்கு மதவாரி, மொழிவாரி சிறுபான்மையினர் பிரிவின் கீழ் இடங்களை கோருவோருக்கும், பிற்பகல் 12 மணி, 2 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடந்தது.

மொத்தம் 220 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், பெற்றோர், கலந்தாய்வில் பங்கேற்றனர். இடங்களைத் தேர்வு செய்தவர்களுக்கு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகெளட் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.

எம்பிபிஎஸ் பாடப்பிரிவில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தமுள்ள 293 இடங்களில் தற்போது வரை 289 இடங்கள் நிரம்பியுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படி அரசு ஒதுக்கீட்டில் 3 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் பிரிவில் 1 இடமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com