சூளகிரி அருகே வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றை யானை

சூளகிரி அருகே வாழைத் தோட்டத்தை ஒற்றை யானை சேதப்படுத்தியது.
சூளகிரி அருகே வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றை யானை

சூளகிரி அருகே வாழைத் தோட்டத்தை ஒற்றை யானை சேதப்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சூளகிரி வனப் பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சூளகிரி வனப் பகுதியில் இருந்த ஒற்றை யானை வியாழக்கிழமை இரவு அருகில் உள்ள பெரிய பாப்பனஅள்ளி கிராமத்துக்குள் நுழைந்து, விவசாயி வெங்கடேசப்பாவின் வாழைத் தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வாழைகளைத் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதே போல, கானப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி எல்லப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. இந்த ஒற்றை யானை குண்டுகுறுக்கி, ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் சுற்றுவதால், அப் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியது: சூளகிரி வனப் பகுதியில் இருந்து கிராமங்களுக்கு வரும் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குண்டுகுறுக்கி, ஏ.செட்டிப்பள்ளி, பெரிய பாப்பனஅள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம். யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் என்றனர்.
தற்போது ஒசூர், சூளகிரி வனப் பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்துவரும் 4 யானைகளையும், அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com