பழனிசாமி பதவி விலகினாலும் ஆட்சி கவிழாது: நாஞ்சில் சம்பத்

அரசுப் பணத்தை செலவழித்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும் ஆட்சி கவிழாது என அதிமுக
பழனிசாமி பதவி விலகினாலும் ஆட்சி கவிழாது: நாஞ்சில் சம்பத்

சென்னை: அரசுப் பணத்தை செலவழித்து கூட்டம் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும் ஆட்சி கவிழாது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை (அதிமுகவை) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றி, சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருந்தார். அவரது மறைவை அடுத்து இடையில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இப்போது, அந்தக் கருத்துவேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலமாக சரி செய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா? துணை முதல்வர் பதவி ஏற்படுத்தப்படுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவடையும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என முதல்வர் பதிலளித்தார்.

இரு அணிகளும் இணைப்பு குறித்து முறையான அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியிடப்படலாம் என்றும் அதிமுகவை வழிநடத்துவதற்காக 17 பேர் கொண்ட குழு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே முறையாக செயல்படவில்லையென்றால் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மாற்ற நேரிடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரன் வீட்டில் நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் செல்லும் விழாவுக்கெல்லாம் அரசுப் பணத்தை செலவழித்து கூட்டம் சேர்த்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மாற்றிட முடியாது என்று கூறினார்.

மேலும்,அதிமுகவில் தவிர்க்க முடியாத தலைவர் டிடிவி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com