தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்கள் தொடக்கம்

தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 15 ரயில் திட்டப் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முடிக்கப்பட்டுள்ள 15 ரயில் திட்டப் பணிகளை புது தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறறந்து வைத்தார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. உடன் ரயில்வே வாரிய உறுப்பினர்க
தமிழகத்தில் முடிக்கப்பட்டுள்ள 15 ரயில் திட்டப் பணிகளை புது தில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறறந்து வைத்தார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. உடன் ரயில்வே வாரிய உறுப்பினர்க

தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 15 ரயில் திட்டப் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள ரயில்பவனில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திட்டப் பணிகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எல்இடி விளக்குகள் மற்றும் ஓய்வு அறை, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வைஃபை வசதி, காட்பாடி ரயில் நிலையத்தில் வைஃபை வசதி, சிசிடிவி கேமரா, அரக்கோணம் ரயில் நிலையத்தில் உணவகம், கிண்டியில் டிக்கெட் முன்பதிவு மையம், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் வசதி, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் உட்பட பல்வேறு திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியது: தமிழகம், கேரளத்தில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும். நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும். 2017-18-ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.2,287 கோடியும், கேரளத்துக்கு ரூ.1,206 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகம் என்றார் சுரேஷ் பிரபு.
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்...முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடக்க நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா வரவேற்றார். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.விஜயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ரவி, கே.எஸ்.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சென்னை கோட்ட மேலாளர் நவீன்குலாதி நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முந்தைய மத்திய அரசு, தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.880 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இந்த ஆண்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 15 திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு முன்வர வேண்டும்: கிழக்கு கடலோர ரயில்பாதை திட்டத்தில் தற்போது சென்னை மகாபலிபுரம் புதுச்சேரி வரையில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரையில் நீட்டிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய அளவில் ஒத்துழைப்பு அளித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
தற்போது மதுரை வரையில் இரட்டைப் பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. எனவே, கன்னியாகுமரி வரையில் எஞ்சியுள்ள இரட்டைப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். செங்கோட்டை- புனலூர் இடையே நடக்கும் அகலப் பாதை பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையும் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தமிழகம்-கேரளம் இடையே ரயில்போக்குவரத்து வசதி கிடைக்கும்.
மதுரை - கன்னியாகுமரி, மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ.3,940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.
சென்னை-கன்னியாகுமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தரவேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு 4-ஆவது ரயில் பாதை, கும்மிடிப்பூண்டி – அத்திப்பட்டு 3, 4-ஆவது திட்டப்பணிகளில் இணைந்து செயல்பட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com