போலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எனக் கூறி, வாகனங்களை மடக்கி, அபராதம் வசூலித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எனக் கூறி, வாகனங்களை மடக்கி, அபராதம் வசூலித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு எதிரே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு, அவ்வழியே வந்த வாகனங்களை மடக்கி, இளைஞர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூரின் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என தன்னைக் கூறிக்கொண்டு, வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து, பணம் வசூல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி ஊழியரையும் மடக்கி, அந்த இளைஞர் அபராதம் விதித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் அங்கு வந்து, பணம் வசூலித்துக் கொண்டிருந்த நபரைப் பிடித்து, விசாரணை நடத்தினர். மேலும், அவரிடமிருந்து ரூ.2,800 பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் போலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்பதும், அவர் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பாடசாலைத் தெருவைச் சேர்ந்த மோகன் (33) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மோகனை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com