வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 22) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 22) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தைக் கைவிடுவது, வாராக்கடன் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுப்பது, வாடிக்கையாளர்கள் மீது அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதைத் தடைசெய்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்பட 9 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை, மாவட்டத் தலைநகர்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறியது:
வாராக்கடன் வசூலிக்க நாடாளுமன்றத்தில் நிலைக்குழு கொடுத்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வங்கிகளின் நிர்வாகக் குழுவில் அதிகாரிகள் சார்பில் ஓர் இயக்குநரும், ஊழியர்கள் சார்பில் ஓர் இயக்குநரும் இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இயக்குநர்கள் நியமிக்கப்பட வில்லை.
எனவே, இயக்குநர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் கடந்த 18}ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த உறுதியும் கொடுக்கவில்லை. எனவே, திட்டமிட்டப்படி, ஆகஸ்ட் 22}இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com