முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு இல்லை: 19 அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளிப்பு

தமிழக பொறுப்பு ஆளுநருர் வித்தியாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, முதல்வர்
முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு இல்லை: 19 அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளிப்பு

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநருர் வித்தியாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கோரி அவர்கள் கடிதம் அளித்துள்ளதாக தெரிகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியும் நேற்று திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி உள்பட 18 பேரும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதையடுத்து தினகரன் இல்லத்தில் அவசர ஆலோசனையில் நடத்திய எம்எல்ஏக்கள் பின்னர், அங்கிருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க சுமார் 9.50 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்து ஆளுநரை சந்தித்தனர். ஆளுநருடனான சந்திப்பின்போது எங்களை கலந்து ஆலோசிக்காமல் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மேலும், அந்த கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் பழனிசாமி இழந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் 19 எம்எல்ஏக்களும் கடிதம் அளித்தக கூறப்படுகிறது.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.  

ஆளுநர் மாளிகைக்கு சென்று வந்த டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவரம்: வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, அரங்கசாமி, முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை.  இவர்களுடன் விளாத்திக்குளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரியும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநர் மாளிகைக்கு சென்று வந்துள்ளனர்.

ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தினகரன் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநருடனான சந்திப்பில் தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் தினகரனுக்கு ஆதரவு அளிப்பது இல்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com