நீட் விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை: நளினி சிதம்பரம் 

'நீட்' தேர்வுக்கு விலக்கு  விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை: நளினி சிதம்பரம் 

புதுதில்லி: 'நீட்' தேர்வுக்கு விலக்கு  விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது இயலாது என்று மத்திய அரசு தனது வாதத்தினை முன்வைத்ததது.

அதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வினை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.  நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையானது 'நீட்' தேர்வு அடிப்படையில் தான் நடக்க  வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் மருத்துவ கலந்தாய்வினை செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னரே முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பினை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் நடைபெற்ற குழப்பங்ககுக்கு எல்லாம் தமிழக அரசுதான் முழு பொறுப்பாளியாகும். அதுதான் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான நம்பிக்கையை முதலில் அளித்தது.

இனி நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை எல்லாம் நீட் தேர்வுயின் அடிப்படையில் நடைபெற இந்த தீர்ப்பு வழி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில்முந்தைய வாதங்களின் போது மத்திய அரசு ஒரு தெளிவான நிலையை எடுத்ததாக தெரியவில்லை. இன்றுதான் இறுதியான ஒரு நிலைப்பாட்டினை அறிவித்தது. தமிழக அரசின் அவசர சட்டமானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும்.

நீட் தேர்வினை பொறுத்த வரையில் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். அவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் சேர்க்கைக்கு தகுதி பெறலாம்.

இவ்வாறு நளினி சிதம்பரம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com