பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர் நிகாம் பிரகாஷ், அமிருத் மாற்றம்

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர் நிகாம் பிரகாஷ், அமிருத் ஆகியோர்

பெங்களூரு:  சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர் நிகாம் பிரகாஷ், அமிருத் ஆகியோர் அதிரடியாக வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் சிறை கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6-வது முறையாகும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரி ரூபா அதிரடி தகவலை வெளியிட்டு வருகிறார். அது முதல் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ஹாரா பொதுச் சிறைச்சாலையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு நடத்தி வரும் விசாரணையின்போது ரூபா இதைக் கூறியுள்ளார்.

கர்நாடக சிறைக் கைதிகள் வெள்ளை சீருடை அணிவதாகக் கூறியுள்ள ரூபா, சசிகலாவும் இளவரசியும் சீருடை அணிவதில்லை என்றும் சசிகலா நடமாடுவதற்காக 120 முதல் 150 அடி வரையிலான 5 சிறை அறைகளைக் கொண்ட வராண்டா தடுத்து யாரும் நுழையாதவாறு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையில் ரூபா கூறியுள்ளார்.

மேலும், நேற்று சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல் ஒரு வீடியோ பதிவு ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது சிறை கண்காணிப்பாளராக உள்ள நிக்காம் பிரகாஷ், அமிருத் ஆகியோர் நள்ளிரவில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சசிகால கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார. அன்று முதல் இன்று வரை 6-வது முறையாக சிறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com