மிகுந்த ஏமாற்றமளிக்கிறது: செம்மலை

அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, தமக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை
மிகுந்த ஏமாற்றமளிக்கிறது: செம்மலை

அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து, தமக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செம்மலை தெரிவித்தார்.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு, துணை முதல்வர்-நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி-தொல்லியல் துறை அமைச்சராக க.பாண்டியராஜன் ஆகியோர் பொறுப்பேற்றனர். ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி, 2001-06-ஆம் ஆண்டில் அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத் துறை, கல்வி அமைச்சராக இருந்த செம்மலை, அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இது குறித்து கேட்டபோது ''அமைச்சர் பதவி அளிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது'' என்றார் செம்மலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com