அரியலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை (ஆக. 23) எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை (ஆக. 23) எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, அரியலூரில் புதன்கிழமை இந்த விழா நடைபெறுகிறது.
விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, ரூ. 5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.சிதம்பரம் எம்.பி. மா.சந்திரகாசி, எம்.எல்.ஏ-க்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்,ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி, வாரியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com