கிராமப்புற குழந்தைகளுக்கு தனித்திறன்களை கற்பிக்க எம்எல்ஏக்கள் உதவ வேண்டும்: கிரண்பேடி

கிராமப்புற குழந்தைகளுக்கு தனித்திறன்களை கற்பிக்க எம்.எல்.ஏக்கள் உதவ வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
கிராமப்புற குழந்தைகளுக்கு தனித்திறன்களை கற்பிக்க எம்எல்ஏக்கள் உதவ வேண்டும்: கிரண்பேடி

கிராமப்புற குழந்தைகளுக்கு தனித்திறன்களை கற்பிக்க எம்.எல்.ஏக்கள் உதவ வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு
பெண்கள் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பிளஸ் டூ மாணவியரே ஆங்கிலத்தில் போதிய புலமை இல்லாமல் அவதிப்படுவதை கண்டார். அவர்களுக்கு உயர் கல்வியில் சிறந்து விளங்கவும், வேலைவாய்ப்பு பெறவும் தனித்திறமைகளை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையே இன்று அவர் தனது கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 
கிராமப்புற மாணவ, மாணவியர் இதுபோன்ற சிக்கல்களை சந்திப்பதை தடுக்க வேண்டிய பொறுப்பு, கடமை தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு
உள்ளது. இதுபோன்ற நிலையை நேரில் காண வேண்டியுள்ளது. எம்.எல்.ஏக்கள் அடிக்கடி தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பார்வையிட வேண்டும்.
மாணவ, மாணவியருக்கு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

முத்தலாக் தீர்ப்புக்கு வரவேற்பு
இதற்கிடையே தனது கட்டுரை (டிவிட்டர்) பதிவில் முத்தலாக் நடைமுறை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆளுநர் கிரண்பேடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையால் முஸ்லிம் பெண்கள் எத்தகைய பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர் என்பதை அனைவரும் அறிவர். தார்மீக, பாரம்பரிய ரீதியில் இம்முறை எவ்வளவு தவறு என்பதை அனைவரும் அறிந்துள்ளனர்.

சட்டரீதியாக இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, தற்போது 5 நீதிபதிகள் அமர்வு இதை மனிதநேயத்துக்கு உகந்தது இல்லை எனக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் சட்டப்படி பழமையான நடைமுறைக்கு பதில் மனிதநேயம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com