நீட் தேர்வுக்கு பிள்ளைகளை தயார் செய்ய முடிவு: பெற்றோர் கருத்து

நீட் தேர்வின்படி மாணவர் சேர்க்கை உறுதியாகிவிட்டதால் ஓராண்டைத் தியாகம் செய்து, அடுத்த ஆண்டு இத்தேர்வை எழுத முடிவு செய்துள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வின்படி மாணவர் சேர்க்கை உறுதியாகிவிட்டதால் ஓராண்டைத் தியாகம் செய்து, அடுத்த ஆண்டு இத்தேர்வை எழுத முடிவு செய்துள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து நல்ல கட் -ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறிய கருத்து:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா: சிபிஎஸ்இ மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதும் அரசும், உச்ச நீதிமன்றமும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்று கருதவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் என் மகள், ஓராண்டு நீட் தேர்வுக்கு தயாராகி, அடுத்த ஆண்டு தேர்வெழுத முடிவு செய்துள்ளார். அழுத்தம் கொடுக்கிறோம் எனக் கூறி வந்த தமிழக அரசு இறுதியில் வஞ்சித்துவிட்டது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல்: பெட்டிக் கடை வைத்துள்ள என் மகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற என் கனவு சிதைந்து போனது. மாணவர்கள் எந்தப் பாடத்தையும் படிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் அதைத் தெளிவாக சொல்ல வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களைப் பழி வாங்கிவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ஜெயந்தன்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மிகவும் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியான மருத்துவர்களை உருவாக்க நீட் தேர்வு அவசியம். இது நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com