இலக்கியத்தின் மூலம் வரலாறு அறியப்படும் ஒரே மாநிலம் தமிழகம்: ஜி.விசுவநாதன்

இலக்கியத்தின் மூலம் ஒரு மாநிலத்தின் வரலாறு அறியப்படுகிறதென்றால், அது தமிழகம் மட்டும்தான் என, விஐடி
உ.வே.சா. பதிப்பித்த பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) பேராசிரியர் ய. மணிகண்டன், உ.வே.சா. நூல் நிலையச் செயலர் தி. சத்தியமூர்த்தி, வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி. விசுவநாதன்,
உ.வே.சா. பதிப்பித்த பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) பேராசிரியர் ய. மணிகண்டன், உ.வே.சா. நூல் நிலையச் செயலர் தி. சத்தியமூர்த்தி, வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி. விசுவநாதன்,

இலக்கியத்தின் மூலம் ஒரு மாநிலத்தின் வரலாறு அறியப்படுகிறதென்றால், அது தமிழகம் மட்டும்தான் என, விஐடி பல்கலைக்கழக வேந்தரும், உ.வே.சா. நூல் நிலைய தலைவருமான ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய பவள விழாவை முன்னிட்டு, உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் பத்துப்பாட்டு நூல் வெளியீட்டு விழா, சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில், உ.வே.சா. நூல்நிலைய தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன், பத்துப்பாட்டு நூலை வெளியிட, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.துரைசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவில், ஜி.விசுநாதன் பேசியது: கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. அதுபோல், ராஜராஜ சோழன் 13 நாடுகளில் ஆட்சி புரிந்துள்ளான். ராஜ ராஜ சோழ வம்சம் தொடர்ந்து ஆட்சிப் புரிந்திருந்தால், ஆங்கிலேயப் பேரரசைவிட தமிழ்ப் பேரரசு நிலைபெற்றிருக்கும். இவ்வாறு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் தமிழகத்துக்கு உண்டு.
புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு உள்ளிட்ட இலக்கியங்களில், தமிழர் தம் வாழ்வியல் குறித்த பல்வேறு விஷயங்கள் உள்ளன.
பொதுவாக ஒரு நாடு குறித்து தெரிய வேண்டுமானால், அந்நாட்டின் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்வோம். ஆனால், எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில், தமிழகத்தின் வரலாற்றை சங்க கால இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பு தமிழகத்துக்கு மட்டுமே உண்டு.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்அனைத்தும் அப்போது, ஓலைச்சுவடிகளில்தான் எழுதி வைக்கப்பட்டன. நமது இலக்கியங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை சிரத்தையுடன் சேகரித்து நூலாக வெளியிட்டதில் உ.வே.சாமிநாதையரின் பங்கு அளப்பரியது. அவர் பதிப்பித்த முதல் பதிப்பு 1889 இல் வெளிவந்தது. அதையடுத்து, 8-ஆவது பதிப்பாக தினமலர்ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மூலம் தற்போது வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்துப்பாட்டு நூல் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், பேராசிரியர்கள் வ. ஜெயதேவன், அரங்க. ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், உ.வே.சா நூல் நிலைய துணைத் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான இ.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். உ.வே.சா. நூல் நிலையப் பொருளாளரும், நிதித் துறை முன்னாள் செயலருமான அ.மு.சுவாமிநாதன், தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் தி.சத்தியமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.
விழாவை சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மணிகண்டன் ஒருங்கிணைத்தார். இதில், மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com