நெல்லை, கோவையில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக திருநெல்வேலி, கோவையில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக திருநெல்வேலி, கோவையில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல்லை -சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06020: திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிழமை (ஆக.24) மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்புக் கட்டண ரயில்
ரயில் எண் 06024: கோவையில் இருந்து வியாழக்கிழமை (ஆக.24) இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com