புதிய பாடத் திட்டத்துக்கு 6 மாதத்துக்குள் வரைவு தயாரிப்பு: மு. அனந்தகிருஷ்ணன்

புதிய பாடத்திட்டத்துக்கு 6 மாதங்களுக்குள் வரைவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது என்றார் புதிய பாடத் திட்ட வடிவமைத்தல் குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான

புதிய பாடத்திட்டத்துக்கு 6 மாதங்களுக்குள் வரைவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது என்றார் புதிய பாடத் திட்ட வடிவமைத்தல் குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. அனந்தகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய பாடத்திட்டம் வடிவமைத்தல் குறித்த மண்டல அளவிலான கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பித்து நல்ல முறையில் தயார்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நல்ல அடையாளம் உள்ளது. பொதுவாக, பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்குக் கல்வி வழிமுறை விரும்பத்தகாத வகையில் உள்ளது. அதை மாற்றி அமைக்கவே புதிய பாடத்திட்ட வடிவமைத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே அடிப்படை அறிவை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்காமல் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், தரம் தாழ்ந்து செல்கிறோம். மாணவர்களின் சிந்தனை, திறமை தெளிவாக இருந்தால், நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வாக இருந்தாலும் தேர்ச்சி பெறுவர்.
புதிய பாடத்திட்டம் குறித்து ஆலோசனை செய்து, 6 மாதத்துக்குள் வரைவுத் திட்டம் தயாரிக்கப்படும். 2018 - 19 ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம், பாடப் புத்தகங்கள் தயாராகிவிடும். கல்வித் திட்டத்தை மாற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றார் அனந்தகிருஷ்ணன்.
மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் ந. லதா, பொன். குமார், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ. சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் பாஸ்கர், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com