19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசாணை விவரம் வெளியீடு

தமிழகத்தில் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசாணை விவரம் வெளியீடு

தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பல துறைகளுக்கு புதிய செயலர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதில், பள்ளிகல்வித்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு முதன்மை செயலர் என்ற புதிய பொறுப்பும் உருவாக்கப்பட்டது.

தமிழக பள்ளிகல்வித்துறை புதிய முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே செயலராக இருந்த உதயசந்திரன் பாடதிட்டத்துக்கு மட்டும் பொறுப்பு வகிப்பார். 

தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் முதன்மைச் செயலராக எல்காட் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரகுமார் மாற்றம். 

காதி மற்றும் கிராம உத்யோக் பவன் மேலாண்மை இயக்குநர் சுடலை கண்ணன் - எல்காட் தலைவராக நியமனம்.

தாட்கோ முதன்மை செயலர் குமார் ஜெயந்த் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலராக மாற்றம். 

கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணை செயலர் பழனிசாமி - பேரூராட்சிகள் இயக்குநராக நியமினம். ஐஏஎஸ் தொழில்நுட்ப கல்வியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதன்மை செயலர் கோபால் - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலராக மாற்றம். 

சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் சுதா தேவி - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம். 

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அசோக் டோங்ரே - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய முதன்மை செயலராக மாற்றம்.

தொழிற்சாலை மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் ஆணையர் ரீடா ஹரிஷ் தாக்கர் - தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளராக நியமனம். 

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவராக அண்ணாமலை நியமனம். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இயக்குநர் ராஜேந்திர ரத்னு - பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம். 

மாவட்ட முகமை திட்ட அலுவலர் ரோகினி - சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றம். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம். 

பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா - சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மாற்றம். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி - தமிழக உள்துறை, கலால் துறையின் துணைச் செயலராக நியமினம்.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் கந்தசாமி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாத் வாட்நீரே - கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமினம். 

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேஷ் - தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையராக நியமினம். 

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com