அமைதி, எளிமைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எடுத்துக்காட்டு: முதல்வர் பெருமிதம்

அமைதி, எளிமைக்கு அதிமுக எம்எல்ஏ}க்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, திருச்சி எம்.பி. ப. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி
விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசுகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, திருச்சி எம்.பி. ப. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி

அமைதி, எளிமைக்கு அதிமுக எம்எல்ஏ}க்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பா. ஆறுமுகத்தின் மகன் முத்தமிழ்ச்செல்வன்} மகேஸ்வரி ஆகியோருக்கு நார்த்தாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று அவர்களை வாழ்த்திப் பேசியது:
மறைந்தும் மறையாமல் நம் அனைவரது உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியைப் பெற்றவர் எம்எல்ஏ பா. ஆறுமுகம். விவசாய குடும்பத்தில் பிறந்து, இன்றுவரை விவசாயத்தைத் தொழிலாகச் செய்பவர். அவரைப்போல நானும் விவசாயம் செய்கிறேன். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், அதிமுக எம்எல்ஏ}க்களில் மிகவும் அமைதியானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் போலவே அதிமுக எம்எல்ஏ}க்களும், நிர்வாகிகளும் திகழ்கின்றனர். எந்த ஒரு நிகழ்ச்சியையும் விட இல்லத் திருமணத்தை சொந்த ஊரில் நடத்துவது சிறப்பானது என்றார் முதல்வர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, திருச்சி எம்.பி. ப. குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து, எம்எல்ஏ} பிரபு, நிர்வாகிகள் க. பாஸ்கர், எஸ். அப்துல்ரகுமான், கூகூர்பாலு, எஸ்விஎஸ். ஜெயகுமார், சுப்பிரமணியன், அன்பானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். எம்எல்ஏ} பா. ஆறுமுகம் வரவேற்றார்.
மாணவர்களை பாராட்டிய முதல்வர்:பின்னர் புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தமிழக முதல்வர் பொதுமக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புத்தாஸ் வீரக்கலைகள் கழக வீரர், வீராங்கனைகள் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றதையொட்டி தாங்கள் வென்ற கோப்பைகள், பதக்கங்களை முதல்வரிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர். இதேபோல பல்வேறு போட்டிகளில் அகில இந்தியளவில் வெற்றி பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க முதல்வர் வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com