பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு

சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைமையில் எதிர்க் கட்சியினர் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
ஆளுநரிடம் மனு அளித்துவிட்டு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வரும் (இடமிருந்து) திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் , சட்டப்பே
ஆளுநரிடம் மனு அளித்துவிட்டு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வரும் (இடமிருந்து) திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் , சட்டப்பே

சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைமையில் எதிர்க் கட்சியினர் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், வி.ஜி.ராஜேந்திரன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் துரைமுருகன் அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்த ஓர் அரசு, ஆட்சி செய்யக் கூடாது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து ஒரு விளக்கமான கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
தமிழக சட்டப்பேரவையில் இப்போதுள்ள 233 சட்டப்பேரவை உறுப்பினர்களில், திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், தினகரன் அணியில் 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் உள்ளனர். அதன்படி, முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசிடம் இப்போது 113 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோது, சட்டப்பேரவையில் 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்ட
நிலையில், இப்போது 113 சட்டப்பேரவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள தமிழக அரசை எப்படி ஆட்சியில் நீடிக்க அனுமதிக்க முடியும்? இந்த அளவுக்கு பெரும்பான்மையை இழந்துள்ள அரசை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் முறையிட்டோம்.
அப்போது, இவை அனைத்தையும் கவனித்து வருவதாகக் கூறிய ஆளுநர், இதுதொடர்பாக ஆராய்ந்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்க ஆளுநர் தாமதிக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com