புளூவேல் விளையாட்டிலிருந்து குழந்தைகளைக் காக்க பெற்றோர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தல்

புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டிலிருந்து, குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புளூவேல் விளையாட்டிலிருந்து குழந்தைகளைக் காக்க பெற்றோர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தல்


புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டிலிருந்து, குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

புளூவேல் விளையாட்டு எனும் ஒருவித அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இணையதள விளையாட்டான இது, 50 நாள்கள் தொடர்ச்சியாக விளையாடக் கூடியதாகும்.

இந்த விளையாட்டில் ஈடுபடும் நபர்கள், எதிர்ப்பக்கத்தில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் அளிக்கும் சவாலான காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். இதை மறுத்தால், அவரை எதிர்ப்பக்கத்தில் இருப்போர் மிரட்டத் தொடங்கிவிடுவர். இதற்குப் பயந்து, விளையாட்டில் ஈடுபடுவோர் தற்கொலை செய்வதாகக் கூறப்படுகிறது.

ரஷியாவில் முதல்முறையாக கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது. அப்போது அந்த விளையாட்டின் பெயர் "எஃப்-57'ஆகும். இதில் ஈடுபடுவோர் தாமாக முன்வந்து தற்கொலை செய்வதால், இதற்கு புளூவேல் விளையாட்டு என்று பிற்காலத்தில் பெயர் வந்தது.

அதாவது, நீர்வாழ் உயிரினமான நீளநிறம் கொண்ட திமிங்கலம், கடலில் இருந்து வெளியே வந்து தனது உயிரை விட்டு தற்கொலை செய்வதாகக் கூறப்படுவதுபோல் இந்த விளையாட்டு இருப்பதால், இந்த பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆன்லைனில் விளையாடும் புளூவேல் என்ற பெயரிலான விளையாட்டுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், உயிரை வைத்து ஆடும் ஆபத்தான புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டிலிருந்து, குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு போலீஸார் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

நீண்ட நேரம் ஆன்லைனில் இருப்பது, செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர்கள் முன் இரவில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்ள வேண்டும் என போலீஸார் கூறியுள்ளனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கட்டாயம் கவனிக்க வேண்டும் என்றும், மாற்றங்களைக் கண்டால் உடனடியாக குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களின் கவனத்தை நல்வழியில் திருப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

புளூவேல் போன்ற கற்பனையான உலகத்திலிருந்து அவர்களை மீட்க, பூங்கா உள்ளிட்ட பிள்ளைகள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை விளையாட அனுமதிக்கலாம் என்றும் போலீஸார் பெற்றோருக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து, சமூக வலைதளம் மூலமும், குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்து தரப்பினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை மேற்கு வங்க மாநில சிஐடி போலீஸார் தொடங்கியுள்ளனர். அது தொடர்பான விடியோ பதிவையும் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com