எங்களைக் கேட்காமல் கட்சி விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி மனு!

எங்களைக் கேட்காமல் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது என்று  தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களைக் கேட்காமல் கட்சி விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி மனு!

புதுதில்லி: எங்களைக் கேட்காமல் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது என்று  தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு தற்பொழுது முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பாத்திரங்களை வாபஸ் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் இன்று தில்லிக்கு பயணம் செய்ய உள்ளனர். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்பொழுது தில்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான புகழேந்தி மற்றும் நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் ஆகிய இருவரும் தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றினை கொடுத்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது:

கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் நாங்கள்தான் எதிர் மனுதாரர்களாக உள்ளோம். எனவே இது தொடர்பாக ஏதேனும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டாலோ அல்லது கோரிக்கை வைக்கப்பட்டாலோ எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்களை கேட்காமல் இது தொடர்பாக எந்த விதமான முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com