விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆட்டோ! டிவிஎஸ்-ஸின் மற்றுமொரு மைல்கல்!!

குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆட்டோவை டிவிஎஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆட்டோ! டிவிஎஸ்-ஸின் மற்றுமொரு மைல்கல்!!


சென்னை: குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆட்டோவை டிவிஎஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

முதல் முறையாக சென்னையில் இந்த குளிர்சாதன வசதி கொண்ட ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் டிவிட்டரில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக எத்தனை வாகனங்கள் இருந்தாலும் ஆட்டோவின் இடத்தை பிடிக்க முடியாது. அந்த வகையில் ஆட்டோக்கள் பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதனை அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், குளிர்சாதன வசதி கொண்ட ஆட்டோக்களை அறிமுகம் செய்ய உள்ளது நிச்சயம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com