திருப்பத்தூர் அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டின் வீரமங்கை நடுகல் கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட வீரமங்கை நடுகல்.
திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட வீரமங்கை நடுகல்.

திருப்பத்தூர் அருகே கி.பி.14-ஆம் நூற்றாண்டின் வீரமங்கை நடுகல் கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஆ.பிரபு மற்றும் சிவசந்திரகுமார் ஆகியோர் திருப்பத்தூரை அடுத்த வெங்காயப்பள்ளி அருகே கருப்பனூர் ஏரியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பழைமை வாய்ந்த வீரமங்கை நடுகல் கண்டறியப்பட்டது. 
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
திருப்பத்தூர் வட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வரலாற்று தொன்மை மிக்க இடங்களாக திகழ்கின்றன. அதற்கு சான்றாக இப்பகுதிகளில் பழைமையான நடுகல்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன. 
கருப்பனூர் ஏரியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட போது பழைமை வாய்ந்த வீரமங்கை நடுகல் ஒன்று கடந்த 27-ஆம் தேதி கண்டறியப்பட்டது. போரில் வீர மரணமடைந்த பெண்ணுக்கு இக்கல் வைக்கப்பட்டிருக்காலாம். 
இந்த நடுகல்லில் ஒரு பெண் குதிரையில் அமர்ந்தப்படி பக்கவாட்டில் பார்ப்பது போன்றும், அவரது ஒரு கையில் குதிரையின் கடிவாளமும், மற்றொரு கையில் ஆயுதமும் உள்ளது. 
அதன் கீழே ஒரு ஆண் உருவமும் இடம் பெற்றுள்ளது. அந்த ஆண், தனது வலது கையை தனது மார்பின் மீது மடக்கி வைத்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 
அதாவது, குதிரை மீது அமர்ந்திருக்கும் வீர மங்கைக்கு அந்த ஆண் மரியாதை செலுத்துவது போல உள்ளது. குதிரை மீது உள்ள பெண்ணின் தலையில் கிரீடம் போன்ற தலைப்பாகை உள்ளதால் அவர் அரச குலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்த நடுகல் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். போரில் உயிர்நீத்த வீர மங்கைக்காக இக்கல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கல்லை பொதுமக்கள் கோடி மாரி என்று அழைக்கின்றனர். இப்பகுதியில் மேலும் பல நடுகல்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இப்பகுதியில் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com