நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-17, பாபநாசம் கீழ் அணை-, சேர்வலாறு அணை-3, மணிமுத்தாறு அணை-2, கடனாநதி அணை-4, ராமநதி அணை-3, கருப்பாநதி அணை-6, குண்டாறு அணை-22, அடவிநயினார் அணை-17, தென்காசி-6.4, செங்கோட்டை-8, ஆய்க்குடி-3, அம்பாசமுத்திரம்-5, கன்னடியன் அணைக்கட்டு-6.4, பாளையங்கோட்டை-1.4.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1498.15 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.55 அடி உயர்ந்து 60 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக 554.75 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 550 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 5.59 அடி உயர்ந்து 64.30 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 32.40 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 54.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 64 அடியாகவும் இருந்தது.
இதேபோல், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 32.15 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 88 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 5.84 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 9.00 அடியாகவும் இருந்தது.
கடனாநதி அணைக்கு விநாடிக்கு 113 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 49.50 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து 20 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
குண்டாறு அணைக்கு வந்து கொண்டிருந்த 16.92 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. கருப்பாநதி அணைக்கு 16 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com