பேரறிவாளனுடன் திருமாவளவன், ஜவாஹிருல்லா சந்திப்பு

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனை மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர்
பேரறிவாளனை சந்திக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,
பேரறிவாளனை சந்திக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனை மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளனை பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். 
இதைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்த தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இதேபோல, நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அபுதாஹிருக்கும் பரோல் வழங்க வேண்டும். 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 7 பேருக்கும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி நிரந்தரமாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகன் தனது விரதத்தைக் கைவிட வேண்டும் என்றார்.
அப்போது மாவட்டச் செயலாளர் ரசீத்அகமது, ஆம்பூர் முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் 
கூறியதாவது: நன்னடத்தை விதிகளின்படி பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுதலை செய்த தமிழக அரசுக்கும், சிறைத் துறையினருக்கும் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயுள் தண்டனை என்பது கடைசி காலம் வரை சிறையில் இருப்பது அல்ல.
இந்திய அளவில் பெரும்பாலான மாநிலங்களில் 10 அல்லது 14 ஆண்டுகள் மட்டுமே ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையில் வைக்கப்படுவார்கள். 
குறிப்பாக, தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். அதன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், மனிதாபிமான அடிப்படையிலும், நன்னடத்தை அடிப்படையிலும் விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். 
சிறையில் இருக்கும் முருகன் ஜீவசமாதி அடையப்போவதாகக் கூறியுள்ளார். அவரை விடுதலை செய்தால் இதுபோன்ற எதிர்மறையான சிந்தனை அவருக்கு ஏற்படாது என்றார்.
பேட்டியின் போது, மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com