பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரம்: சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ்;  திமுக முறையீடு

பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரம்: சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ்;  திமுக முறையீடு


சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

திமுக சார்பில் வழக்குரைஞர் நீலகண்டன் தாக்கல் செய்த இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

பேரவைக்குள் குட்காவை எடுத்த வந்த விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, குட்கா ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதால் விரைந்து விசாரிக்க திமுக வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இந்த ஒப்புதலை அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com