ஆண்டுக்கு 2 மி.மீ. அளவுக்கு விரிவடைந்து வரும் மெரீனா: பேரிடர் மேலாண்மை நிபுணர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

கடல் அரிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மெரீனா கடல் பகுதி ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லி மீட்டர் அளவுக்கு விரிவடைந்து வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணரும்,
ஆண்டுக்கு 2 மி.மீ. அளவுக்கு விரிவடைந்து வரும் மெரீனா: பேரிடர் மேலாண்மை நிபுணர் ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

கடல் அரிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மெரீனா கடல் பகுதி ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லி மீட்டர் அளவுக்கு விரிவடைந்து வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணரும், சென்னைப் பல்கலைக்கழக புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவருமான ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உயர் கல்வி நிறுவனங்களின் வளாகப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர், மேலும் பேசியதாவது: 
சென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகு கடந்த 40 ஆண்டுகளாக மெரீனாவில் கடல் அரிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கடல் அரிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து ஒவ்வோர் ஆண்டும் 2 மி.மீ. அளவுக்கு மெரீனா கடல் பகுதி விரிவடைந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது வடசென்னை கடல் பகுதிதான்.
2004-இல் சுனாமி , 2015-இல் பெரு வெள்ளம் ஆகியன சென்னைக்கு ஏராளமான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டபோதும், அவற்றை இன்னும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை.
இதற்கு, அந்தந்தப் பகுதி மக்களின் ஈடுபாடு இல்லாததே காரணம்.
இதுபோன்ற பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் அரசாங்கமே செய்யவேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். இது சாத்தியம் இல்லை. அந்தந்தப் பகுதி மக்கள் ஈடுபாடு இருந்தால் மட்டுமே, பேரிடர் முன்னெச்சரிக்கைத் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.
கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்நாடு போலீஸ் நண்பர்கள் அமைப்பு நிறுவன இயக்குநரும், காவல்துறை கூடுதல் இயக்குநருமான பிரதீப் வி. பிலிப் கூறுகையில், கல்லூரி வளாகங்களில் நடைபெறும் ராகிங் கொடுமைகள், பள்ளிகளில் நடைபெறும் சிறுமிகள், சிறுவர்களுக்கான பாலியல் தொல்லைகள் போன்ற சமூக விரோத செயல்களைத் தடுக்க போலீஸ் நண்பர்கள் அமைப்பு சிறந்த கருவியாக இருக்கும். 
இந்த போலீஸ் நண்பர்கள் அமைப்பு (எப்.ஒ.பி.) 25 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இதில் சேரும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கல்லூரி, பள்ளி வளாகத்திலும் இந்த அமைப்பை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com