ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: அமித்ஷா உள்பட 139 நட்சத்திர பேச்சாளர்கள்

பாஜக தலைவர் அமித்ஷா உள்பட 139 பேரை நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உரிய அனுமதிகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

பாஜக தலைவர் அமித்ஷா உள்பட 139 பேரை நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உரிய அனுமதிகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இப்பேச்சாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெறும் போது, அவர்களுக்கான பயணச் செலவு, வாகனங்கள் உள்ளிட்டவை வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாது.
இந்த சிறப்பு வசதியைப் பெற வேண்டுமெனில், தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெறுவது அவசியம். அந்த வகையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 139 பேர் நட்சத்திரப் பேச்சாளர்களாக முன் அனுமதி பெற்றுள்ளனர்.
பாஜக, அதிமுக, திமுக: பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் அமித்ஷா, மாநிலத் தலைவர் தமிழிசை உள்பட 40 பேரும் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேரும் திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட 40 பேரும் தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரசாரத்துக்காக செய்யும் பயணச் செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாது.
அதிமுகவைப் பொறுத்தவரையில், 20 அமைச்சர்களின் பெயர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர்த்து, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், சி.பொன்னையன், பா.வளர்மதி, பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அடிப்படையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தோருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான அனுமதி தரப்பட்டுள்ளது. அதில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 19 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com