ஆர்.கே.நகர்: டிச.11-இல் திமுக கூட்டணி பிரசாரக் கூட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரப் பொதுக்கூட்டம் டிச.11-இல் நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரப் பொதுக்கூட்டம் டிச.11-இல் நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கவில்லை: திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், திமுகவின் பொதுக் கூட்டங்களில் ஒன்றாகப் பங்கேற்க மாட்டோம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். அதனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஜி.ராமகிருஷ்ணனுக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com