ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அவசியம்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஊழலை ஒழிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைப்பை உடனே ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அவசியம்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஊழலை ஒழிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைப்பை உடனே ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தமிழக அரசுத்துறைகளில் ஊழலும், லஞ்சமும் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த கேள்வியை நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார். நேர்மையான அதிகாரிகள் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே, தவறு செய்யும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 
ஊழல் செய்யும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு முன் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக ஊழல் ஒழிப்பு கீழிருந்து மேலாக செல்வதற்கு பதிலாக மேலிருந்து, அதாவது முதல்வர், அமைச்சர்கள் நிலையிலிருந்து கீழ்நோக்கி, அதாவது அதிகாரிகளை நோக்கி பயணிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழி, லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதும் தான். லோக் ஆயுக்தா அமைப்பும், சேவை பெறும் உரிமைச் சட்டமும் இந்தியாவில் 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. தன்னாட்சி அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பை சிறப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கி முதல்வர், அமைச்சர்களை அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா சட்ட முன்வரைவைக் கொண்டு வரவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com