தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை

நடிகர் விஷால் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை

நடிகர் விஷால் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஆளும் கட்சியின் மிரட்டலால் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியைப் பொருத்தவரையில் ஆளுங்கட்சியினர் சொல்வதை மட்டும்தான் செய்வார் என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தேர்தல் அதிகாரியை மாற்ற, தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி வாக்காளர்கள்: திமுக கூறியபடி தேர்தல் ஆணையம் இன்னும் போலி வாக்காளர்களை நீக்கவில்லை. சுமார் 40,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகச் சொன்னாலும், இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்கப்படவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம். 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். எந்தவிதமான அத்துமீறல் நடந்தாலும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். 
தேர்தல் ரத்து: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய அதிமுக முயற்சிப்பதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் உரிய விசாரணை நடத்தி, தேர்தல் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com