பெண் வீட்டில் போலி திருமணச் சான்றிதழ் கொடுத்த காதலர் உள்பட இருவர் கைது

மதுரையில் திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்த காதலர், நண்பரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெண் வீட்டில் போலி திருமணச் சான்றிதழ் கொடுத்த காதலர் உள்பட இருவர் கைது

மதுரையில் திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் பதிவுத் திருமணம் நடைபெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்த காதலர், நண்பரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (30).  திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது நண்பர் சரவணக்குமார், பழங்காநத்தம் நேரு நகரில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக இக்பால் அடிக்கடி மதுரை வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணக்குமாரின் மனைவியும், வசந்த நகர் நீலகண்டன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மகள் பமீதாவும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.  இதில் இக்பால் மதுரைக்கு வரும்போது பமீதாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பமீதா வீட்டில் சென்று இக்பால் பெண் கேட்டுள்ளார். அப்போது இக்பால் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பதால் பெண் தர மறுத்து விட்டனர். இதனால் இக்பால், தனக்கும் பமீதாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்று அதை பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்து,  அதற்கான திருமணச் சான்றிதழையும் காண்பித்துள்ளார். 

இதில் பெண் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சென்னைக்கு சென்று விசாரித்துள்ளனர். இதில் வேறு ஒருவருக்கு நடந்த பதிவுத் திருமணச் சான்றிதழில் இக்பால்,  பமீதா ஆகியோரது புகைப்படங்களை ஒட்டி போலியாக தயாரித்திருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து,  பெண்ணின் தந்தை அப்துல் ரகுமான் (47) அளித்த புகாரின் பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இக்பால்,  சரவணக்குமார் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com