ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 59 வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியல் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களின் பட்டியல் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இறுதி செய்யப்பட்டு அதன் பட்டியல் இரவு வெளியிடப்பட்டது. 
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம்: ஏ.சி.சத்தியமூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை, கரு.நாகராஜன் (பாஜக) - தாமரை, இ.மதுசூதனன் (அதிமுக) - இரட்டை இலை, என்.மருதுகணேஷ் (திமுக) - உதயசூரியன், எம்.எல்.ரவி (தேசிய மக்கள் சக்தி கட்சி) - பானை, கா.கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி) - மெழுகுவர்த்திகள், ஜி.கேசவலு (எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம்) - விசில், ப.சத்தியமூர்த்தி (அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்) - குடை மிளகாய், இ.சடையாண்டி (சோசஸிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா கம்யூனிஸ்ட்) - மின்கல விளக்கு, எம்.ரமேஷ் (நமது கொங்கு முன்னேற்றக் கழகம்) - தொப்பி, வ.ரமேஷ்பாபு (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா பார்ட்டி) - டிராக்டர் இயக்கும் உழவன், எம்.எஸ்.ராஜேந்திரன் (காமராஜர் தேசிய காங்கிரஸ்) - மோதிரம் ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர், தேர்தல் மன்னன் கே.பத்மராஜனுக்கு திருக்கைக்கல் உள்பட அனைத்து சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com