குஜராத் பேரவைத் தேர்தல்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுதொடர்பாக சு.திருநாவுக்கரசர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து என் தலைமையில் முன்னணி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பிரசாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை (டிச.8) காலை சென்னையிலிருந்து குஜராத் புறப்படுகிறோம். 
குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். 
குஜராத் மாநிலத்தில் 21 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை வேகமாக வீசி வருகிறது. இதன் மூலம் அங்கு பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை அமைந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com