சூடுபிடித்தது ஆர்.கே.நகர்: தலைவர்கள் வாக்குச் சேகரிப்பு

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினர்.

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினர்.
முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு எஸ்.என். செட்டி தெருவில் அதிமுக கிளை தேர்தல் அலுவலகத்தை அவர்கள் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து, அரிநாராயணபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் முதல்வரும், துணை முதல்வரும் சுவாமி வழிபாடு செய்த பின்னர், அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். அவர்களுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரும், ஏராளமான அதிமுகவினரும் கட்சி கொடியையும், இரட்டை இலையையும் ஏந்திச் சென்றனர்.
பின்னர், கொருக்குப்பேட்
டை மேம்பாலம் அருகே பிரசார வாகனத்தில் இருந்தபடி முதல்
வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியின் பொருளாதாரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "இந்தத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தால் தொகுதி வளம் பெறும்' எனக் கூறுகிறார்.
ஆனால், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த காலத்திலும், துணை முதல்வராக பதவி வகித்தபோதும் ஆர்.கே.நகர் தொகுதிக்காகவும், இங்கு வாழும் மக்களுக்காகவும் அவர் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இங்கு வெற்றி பெற்ற பிறகே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு விடிவு காலம் பிறந்தது. அவரது மேலான திட்டங்களை தொடர, அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் முதல்வர்.
அனைவருக்கும் குடியிருப்புகள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, "இந்தப் பகுதியில், குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்புகள் தேவைப்படும் பயனாளிகள் குறித்த பட்டியல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு குடியிருப்புகள் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
திமுக பிரசாரம்: திமுக வேட்பாளர் மருது கணேஷும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com